Connect with us

Cinema News

தியேட்டர் முன்பதிவில் கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி!

Published

on

கோகோ மாக்கோ, இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல்,  நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic Road Trip Comedy இருக்கும் என்கிறார்  இயக்குநர் ராம்காந்த்.  இவர் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கவில்லை என்கிற போதிலும்,

எழுத்து -இயக்கத்துடன்  இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார்.

நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார்.இவர்  துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகியாக புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட் ரியாவுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், அஜய் ரத்னம்,  சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.

சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, வினோத் ஸ்ரீதர் எடிட்டிங்கைக் கையாண்டிருக்கிறார்.

இன்ஃபோ புளுட்டோ மீடியா வொர்க்ஸ் InfoPluto Media Works தயாரிக்க, ரூஃப் ஸ்டுடியோஸில் Roof Studios படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் நடந்திருக்கின்றன.

சென்னை, நுங்கம்பாக்கம் பிரிவியூ திரையரங்கில் இந்தப்படத்தின் டிரையலர் வெளியீட்டு விழா எளிமையாக நடைபெறத் திட்டமிட்டிருந்த நிலையில், அருகிலேயே தனது அலுவலகத்தில் இருந்த கே.பாக்யராஜ் இந்த இளைஞர் பட்டாளத்தின் வித்தியாசமான முயற்சியைக் கேள்விப்பட்டு,  எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் உடனடியாக  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

“ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை கோக்கு மாக்காக இளமையாக யோசித்து காட்சிக்கு 3 முறை ரசிகர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம்…” என்கிற இயக்குநர் அருண்காந்த் உள்ளிட்ட படத்தில் பங்குபெற்ற அனைவரும் கோயமுத்தூர்க்காரர்கள் என்பது கூடுதல் சிறப்பு.,

கோயமுத்தூர் குசும்பு என்று சொல்வார்களே அதைத்தான் கோகோ மாக்கோ என்று  புதுபெயரிட்டிருக்கிறார்கள் போலும். கோக்கோ மாக்கோ படத்திற்கான வசனங்களை முன்னரே எழுதாமல், காட்சிக்கும் அது நடக்கும் இடத்திற்கும் அந்தக் காட்சியில் பங்குபெறும் கதாபாத்திரங்களுக்கும்   ஏற்றவாறு உடனுக்குடன் எழுதியிருக்கிறார் இயக்குநர் அருண்காந்த்.

12 நாட்களில் முழுப்படத்தை முடித்திருந்தாலும்,  பொழுதுபோக்குடன் ஒரு அழுத்தமான கதையும் இருக்கிறது என்கிறார்  இயக்குநர்.

“புளூட்டோ என்கிற ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் சாம்ஸின் பார்வையில் இந்தக்கதை நடப்பதாகக் காட்டியிருக்கிறோம் என்றார் கோகோ மாக்கோ ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர்.

இந்தப்படத்தின் எடிட்டராக மட்டுமல்ல, இணைதயாரிப்பாளராகவும் நடிகராகவும் பணிபுரிந்திருக்கும் வினோத்,  ” படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுத்திருக்கிறோம். எடிட்டிங்கில் அதிகம் தூக்கியெறியப்படாத படம் அதாவது zero wastage film  இதுவாகத் தான் இருக்கும்..” என்கிறார்

” எனது படங்களில் முதன்முறையாக முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசி நடித்திருக்கிறேன். ரசிகர்களுக்கு நிச்சயமாக புது அனுபவமாக இருக்கும்… செய்யிற வேலையைத் திருப்தியாகச் செய்யவேண்டும் என்று துடிக்கும் இளைஞர் பட்டாளத்தில் நானும் இருப்பதே பெருமையாக நினைக்கிறேன்..”  என்றார் நகைச்சுவை நடிகர் சாம்ஸ்

முற்றிலும் புதியவர்களை வைத்து, புதியவர்களால் உருவாக்கப்பட்ட கோகோ மாக்கோவை விநியோகஸ்தர்களோ திரையரங்கு உரிமையாளர்களோ முன்வராத நிலையில், படத்தின் இயக்குநர் டிக்கெட் முன்பதிவுக்கான பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்திருக்கிறார். www.arunkanth.in என்கிற இணையத்தில் சென்று, உங்களது அருகாமையிலுள்ள திரையரங்கில்  டிக்கெட்டுகளை முன்பதவு செய்யலாம்.

பிப்ரவரி 14, 2019 படம் குறித்த நாளில் வெளியாகவில்லை என்றால், முழுப்பணமும் திரும்பி வந்துவிடும். அல்லது, வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று விரும்பினால், டிக்கெட் விலையான 150 ரூபாயில் 100ரூ திரும்பப்பெற்றுக் கொண்டு 50 ரூபாயில் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம். இதில் முன்பதிவு செய்ய கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு. நேற்று அறிமுகமான 24 மணி நேரத்தில் 5000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடக்கது.

படக்குழுவினரைப் பாராட்டிப் பேசிய கே.பாக்யராஜ், ” ஒவ்வொருவரும் படத்தை மிகவும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். எனது படங்களிலும் படப்பிடிப்புத்தளத்தில் தான் வசனம் எழுதுவேன் என்றாலும், கதை உருவான போதே வசனங்களை மனதில் ஓட்டிப்பார்த்துவிடுவேன்.  நானும் யாரையுமே தெரியாமல் தான் சென்னைக்கு வந்தேன். நீங்களாவது  திரை ஆக்கம் தொடர்பாக நிறையக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறீர்கள்..

இன்று யூடியூபிலேயே சினிமா கற்றுக் கொள்ளலாம். இன்றைய பெரிய நாயகர்கள் சம்பளம் வாங்காமல், பங்குதாரர்களாக இணைந்தால் சுலபமாகப் படம் எடுத்துவிடலாம். வணிகரீதியில் எனக்கு அனுபவம் இல்லை. எனினும், டிக்கெட் முன்பதிவு சம்பந்தமான இளைஞர்களின் இந்தப் புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்..” என்றார்.

எழுத்தாளர் சங்கத்தில் ராஜினாமா செய்ததைத் திரும்பப் பெற்றிருப்பதுடன், தான் ராஜினாமாவை அடுத்து ராஜினாமா செய்த செயற்குழு உறுப்பினர்களின் ராஜினாமாவையும் திரும்பப்பெற வைத்து, அனைவரும் சேர்ந்து உத்வேகத்துடன் செயல்பட தயாராகிவிட்டார் கே.பாக்யராஜ் என்பது கூடுதல் தகவல்

 

Advertisement

Cinema News

விறுவிறுப்பான படப்பிடிப்பில் நகுல்  நடிக்கும் ‘வாஸ்கோடகாமா’

Published

on

By

தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெருமை நிகழ்வாக சமீபத்தில் 100 விஐபிக்கள் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். அந்தப் படம் ‘வாஸ்கோடகாமா’ ‘

நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன்,,ஆரியா, வெங்கட்பிரபு,பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள்  ,அதுல்யா ரவி, பிரியா பிரகாஷ் வாரியர்,இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார் போன்ற 100 பேர் விநாயகர் சதுர்த்தி அன்று அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும்  ‘வாஸ்கோடகாமா’  படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இந்தப் படத்தை  ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.இதில் சிறப்புவிருந்தினராக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன் , கே.ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் டத்தோ பி. சுபாஷ்கரன் ,இயக்குநர்  ஆர்.ஜி.கிருஷ்ணன்,நாயகன் நகுல் ,இசை அமைப்பாளர் என்.வி .அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் பேசும்போது,

“குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும்  குணம் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதை   சொல்லும் படம்தான் ‘வாஸ்கோடகாமா’.

இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். கதை பிடித்துப்போய் விட்டது.உடனே சம்மதம் கூறியுள்ளார்.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். ” என்கிறார் இயக்குநர்.

படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இவர்  ‘நான் சிரித்தால் ‘ போன்று சில படங்களில் ஒளிப்பதிவு  செய்துள்ளவர். இசை என்.வி. அருண். இவர் எஸ்பிபி கடைசியில் பாடிய பாடலான பாடல் இடம்பெற்ற ‘என்னோட பாட்ஷா’ என்கிற ஆல்பத்திற்கு  இசையமைத்தவர்.

சண்டைக்காட்சிகள்- விக்கி .இவர் ‘உறியடி’ , ‘சூரரைப்போற்று’ படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்தவர்.கலை இயக்கம்- ஏழுமலை.  எடிட்டிங் தமிழ்க்குமரன் .இவர் ஏராளமான குறும்படங்களுக்குப் படத்தொகுப்பு செய்தவர்.

படத்தில் 4 பாடல்கள் உள்ளன. நடனக்காட்சிகளை பிக்பாஸ் புகழ்  நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார்.

‘வாஸ்கோடகாமா’ படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது

 

Continue Reading

Cinema News

‘ஜெய்பீம்’ படக்குழுவினரை பாராட்டிய ‘தோழர் நல்லகண்ணு’

Published

on

By

தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.

முன்னதாக படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை என் எப் டி சியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை இரவு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார்.

படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு அவர்கள், நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார். நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லக்கண்ணு பதிவு செய்தார்.

தமிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘ஜெய் பீம்’. நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்டு தன் எல்லைகளைத் தாண்டியும் எப்படிப் போராடினர் என்பதற்கான சாட்சி  ‘ஜெய் பீம்’.

இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர்.

நவம்பர் 2 ஆம் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில், தற்போது ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டு, நடிகர் சூர்யாவையும் ஜெய்பீம் படக்குழுவினரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Continue Reading

Cinema News

விஜய் ‘பெரிய ஹீரோ’.. அவரு சொல்லிட்டாருன்னு.. திருந்தவா போறாங்க – ராதாரவி.

Published

on

By

பிரபல யூடியூப் திரை விமர்சகர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கியுள்ள படம், ‘ஆன்டி இண்டியன்’. ‘மூன் பிக்சர்ஸ்’ சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ளார். விரைவில் வெளியாவிருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம், பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், சார்லஸ் வினோத், நடன இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.,

இந்தப்படத்தில் நடித்துள்ள கானா பாடகர்களை மேடைக்கு வரவழைத்து கலகலப்பாக இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை துவங்கினார்கள்..

நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது,

“இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன்.. ஏன்னா இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். படத்துல சிஎம்-ஆ நடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்ஆ இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியும்.. படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும்.. ஆனா இந்த நேரத்துல இந்தப்படம் வெளியாகும்போது யாரு என்னவிதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியல

இந்தப்படம் வெளியாகிறதுக்கே மாறனுக்கு நிறைய எதிர்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.. நிஜம் தான்.. அத்தனை பேரு படத்த கழுவி ஊத்திருக்கார்.. நிச்சயம் காத்துக்கிட்டுதான் இருப்பாங்க.. திட்டத்தான் செய்வாங்க.. அதேசமயம் படம் வெளியானா மாறனுக்கு வாழ்த்தும் கிடைக்கும்.. அந்த அளவுக்கு திட்டும் கிடைக்கும்.. அதனால யாரும் என்ன வேணா பேசிட்டு போகட்டும்.. நீ எதுக்கும் வாய் திறந்து கருத்து சொல்லாம அப்படியே சைலண்ட்டா இருந்துரு.

ஒரு படத்தை படமா பாருங்க.. படம் முடிஞ்சுதா, அதை தியேட்டர்லயே விட்டுட்டு வந்துருங்க.. விஜய் பைரவான்னு ஒரு படத்துல மெடிக்கல் காலேஜ் மோசடி பத்தி சொல்லிருந்தாரு.. ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ சொல்லிட்டாருன்னு உடனே திருந்தவா போறாங்க.. அதுக்கு பின்னாடி இதே மாதிரி ரெண்டு காலேஜ் திறந்துட்டாங்க..

நிச்சயம் இந்தப்படம் வெளியானதும் இதுக்கு விவாத மேடை நடத்துறதுக்கு தயாரா ஒரு கூட்டம் இருக்கும்.. இந்தக்காலத்துல கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்ப தான் பொய் பெயர்களை சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல,, அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது.

படங்களை எல்லாம் ஒடிடி தளத்துலேயே ரிலீஸ் பண்ணிகிட்டே இருந்தா, உன் படத்துக்கு இவ்வளவுதான் வேல்யூ அப்படினு, நாளைக்கு ஹீரோவாட சம்பளத்தையே அவங்க தான் நிர்ணயிப்பாங்க” என்றார்.

Continue Reading
Advertisement

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.