Connect with us

Cinema News

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் த்ரில்லர் படம் ‘அன்பிற்கினியாள்’

Published

on

அப்பா – மகள்  இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன.  ஆனால் அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான். அப்படியொரு அற்புதமான கதையை இயக்கியுள்ளார் கோகுல். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றுமே மாறுபட்ட வகையைச் சேர்ந்தவை. அந்த வரிசையில் இந்தப் புதிய படத்தின் கதையும், களமும், காட்சிகளும் புதிய கோணத்தில் இருக்கும்  என்று நம்பலாம்.

ஏனென்றால் அப்பா – மகள் வாழ்வியலைச் சொல்லும் கதையில் நிஜ அப்பா – மகள் நடித்தால் எப்படியிருக்கும்…? அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை அனைத்துமே இன்னும்   உணர்வுப்பூர்வமாக இருக்கும். அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் இருவரும் இந்தக் கதையில் அப்பா-மகள்  கதாபாத்திரங்களில்  நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது படக்குழு.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கு ‘அன்பிற்கினியாள்’ என்று தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. இதில் ஹப் மற்றும் ப்ரீஸர் செட்கள் போடப்பட்டு சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.

‘அன்பிற்கினியாள்’ படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியனின் நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும் என்கிறார் இயக்குநர் கோகுல். ஏனென்றால், சில முக்கிய காட்சிகளில் தனது உடலசைவுகள் மற்றும் கண்கள் மூலமாகவே பேசியிருக்கிறார். மேலும், ப்ரீஸர் அரங்குகளில் கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அப்போது -11 டிகிரி, -12 டிகிரி குளிரிலும் அசராது நடித்துப் படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். நீண்ட வருடங்கள் கழித்து நடிப்பு உலகிற்கு திரும்பியுள்ள அருண் பாண்டியனின் நடிப்பு பார்வையாளர்களைப் பேசவைக்கும் என்கிறது படக்குழு.

எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் அவசியம் என்பார்கள். இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களே வெற்றிக்குச் சான்றாக அச்சாரம் இட்டுள்ளது.  எந்தவொரு களமாக இருந்தாலும் தன் கேமரா கோணங்களால் அழகூட்டிய மகேஷ் முத்துசுவாமி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் கோகுல் – மகேஷ் முத்துசுவாமி இருவருமே இணைந்து பணிபுரிந்து வெற்றியை ருசித்திருக்கிறார்கள். அதில் இரவு நேரக் காட்சிகளைத் தத்ரூபமாகப் படமாக்கியதால், இந்தப் படத்துக்கும் அவருடனே பணிபுரிந்திருக்கிறார் கோகுல்.

இசையமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார் ஜாவித் ரியாஸ். இவர் ‘மாநகரம்’ படத்தின் பின்னணி இசை மூலம் பேசப்பட்டவர். கோகுலின் படங்களுக்கு எப்போதுமே அனைத்து பாடல்களையும் எழுதுபவர் லலித் ஆனந்த். அவர் தான் ஜாவித் ரியாஸ் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என கோகுலிடம் சிபாரிசு செய்திருக்கிறார். அந்த நம்பிக்கையில் பணிபுரிந்த கோகுலைப் பின்னணி இசையில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். தனது முந்தைய படங்களின் பின்னணி இசையை விட, இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் கச்சிதமாக இருக்கும். அந்தளவுக்கு மிரட்டியிருக்கிறார். த்ரில்லர் படங்களுக்கே உரிய இசையாக இருந்தாலும், அதிலும் ஒரு வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்கிறார் இயக்குநர் கோகுல்.

கலை இயக்குநராக ஜெய்சங்கர் பணிபுரிந்திருக்கிறார். அவருடைய ஹப் மற்றும் ப்ரீஸர் அரங்குகள் கண்டிப்பாகப் பேசப்படும். ரொம்ப சவாலான அரங்கைத் தத்ரூபமாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு கச்சிதமாக உருவாக்கிக் கொடுத்துள்ளார். எடிட்டராக பிரதீப் ஈ.ராகவ் பணிபுரிந்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சண்டைக் காட்சிகளின் இயக்குநராக பிசி பணிபுரிந்திருக்கிறார். அவருடைய இயற்பெயர் பிரபு. ப்ரீஸர் அரங்கில் உள்ள சண்டைக் காட்சிகள் ரொம்பவே எதார்த்தமாக அமைத்துக் கொடுத்தார்.

இந்தப் படம் அப்பா – மகள் உறவை மையப்படுத்திய த்ரில்லராக இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு என்பது அசாத்தியமானது. பார்வையாளர்களுக்குத் திரையில் ஒரு நல்ல எமோஷனலான த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது. கோடை விடுமுறைக்குத் திரைக்கு வரவுள்ளது.

Advertisement

Cinema News

விரைவில்.. டேக் டைவர்ஸன்.

Published

on

By

இயக்குனர் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் படம், ‘டேக் டைவர்ஷன்’ . இதில்  ‘பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். இப்படத்தில் அறிமுக நாயகனாக சிவகுமார் நடிக்க, நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளனர்.  இவர்களுடன் ஜான் விஜய் தான்  வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய்,  பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும்  நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைத்துள்ளவர்  ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே  ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர். இந்தப்படத்தில் இசையமைப்பாளர் தேவா பாடி,  நடன இயக்குநர் சாண்டி நடனமாடியிருக்கும்   ‘மஸ்தானா மாஸ் மைனரு ‘ என்கிற கானா பாடல், இணைய உலகில்  லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

‘டேக் டைவர்ஷன்’ விரைவில் வெளியாக இருக்கிறது.

Continue Reading

Cinema News

சர்ச்சைக்குரிய சர்ஜுன் இயக்கும் புதிய படத்தில் கலையரசன், மிர்ணா!

Published

on

By

பல வெற்றிப்படங்களை விநியோகம் செய்த SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்,மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இதில் கலையரசன், அவரது  ஜோடியாக மிர்னா நடிக்கிறார்கள்.

‘மா’, ‘லட்சுமி’ உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய குறும்படங்களையும், நயன்தாரா நடித்த ‘ஐரா’ படத்தையும் இயக்கிய சர்ஜுன் இப்படத்தின் கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

ஒரு அசாதாரணமான சூழலில் தனிமையில் இருக்கும் பெண்ணை ஒரு இளைஞன் சந்திக்க நேருகிறது. அந்த சூழலில் நடக்கும் விஷயங்களை இருவரும் எவ்வாறு சந்தித்து, பயணித்து கடந்து போகிறார்கள் என்பதை சுவாரஸ்யமான, இதுவரை சொல்லப்படாத பின்னணியில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இயக்குனர் சர்ஜூன்.

Continue Reading

Cinema News

லலிதா ஷோபிக்கு ‘கேரள மாநில’ திரைப்பட விருது!

Published

on

By

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜின் மனைவி, லலிதா ஷோபி. இவரும் நடன இயக்குனராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

ஜெயசூர்யா, அதிதி ராவ் நடிப்பில் நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான `சுஃபியும் சுஜாதாயும்’ என்ற மலையாளப் படத்தில், லலிதா ஷோபி நடன இயக்குனராக பணியாற்றினார். சென்ற வருடம் வெளியான இப்படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பாராட்டை பெற்றதுடன், 51 வது கேரள மாநிலத்தின் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக லலிதா ஷோபிக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து நடன இயக்குனர் லலிதா ஷோபி கூறுகையில்,

“இந்த விருதை நம்மை விட்டு மறைந்த இயக்குனர் நரணிபுழா ஷாநவாஸ் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். அவருடன் பணியாற்றிய நாட்கள் மறக்கமுடியாதவை.

நான் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கையில்,  இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு  கூறியிருந்தனர்.  அது இன்று நிறைவேறியுள்ளது.

மேலும் `சுஃபியும் சுஜாதாயும்’ படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கேரள மாநில திரைப்பட விருது குழுவினருக்கும் மற்றும் கேரள மாநில அரசுக்கும் இத்தருணத்தில் எனது  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.