ஆபாச பட இயக்குனர் படத்தில் நடிக்கும் ‘பிரபுதேவா’

‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ். பி. ஜெயக்குமார். இந்தப்படங்கள் அனைத்துமே ஆபாச காட்சிகளும், வசனங்களும் நிறைந்தவை. இந்தப்படங்கள் வெளியானபோது கண்டனங்களும் எழுந்தன.

இயக்குனர் சந்தோஷ். பி. ஜெயக்குமார் நடனப்புயல்’ பிரபுதேவா நடிப்பில, ‘பொய்க்கால் குதிரை’ என்ற பெயரில் ஒரு படத்தினை எடுத்து வருகிறார்.அந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

பிரபுதேவா ஒற்றைக்காலுடன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் ‘பிக்பாஸ்’ பிரபலம் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

ஆக்‌ஷன், எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகிவரும் ‘பொய்க்கால் குதிரை’ படத்தினை ‘மினி ஸ்டுடியோ’ பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார், டார்க் ரூம் பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.