Connect with us

Cinema News

Sarvam-thaalamayam – Review

Published

on

மின்சாரக்கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘சர்வம் தாள மயம்.’ ஜி.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசயமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

மிருதங்கம் தயாரிப்பதை தொழிலாக செய்து வருபவர் குமரவேல். அவருடைய மகன் ஜி.வி.பிரகாஷ், விஜய்யின் தீவிர ரசிகன். மிருதங்க இசை உலகின் ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் நெடுமுடி வேணு. அவருடைய மிருதங்க இசையால் ஈர்க்கப்படும் ஜி.வி.பிரகாஷ் சிஷ்யனாக சேர்த்துக்கொள்ள அவரிடம் கேட்கிறார். முதலில் மறுப்பு தெரிவிக்கும் அவர் பின்னர் சேர்த்துகொள்கிறார். இதனால் நெடுமுடி வேணுவிடம் முதலிடத்தில் இருக்கும் சிஷ்யன் வினீத் – ஜி.வி.பிரகாஷ் இடையே மோதல் ஏற்பட்டு ஜி.வி.பிரகாஷ் வெளியேற்றப்படுகிறார். அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களே. சர்வம் தாளமயம்!

இயக்குனர் ராஜீவ் மேனனின் துணிச்சலான பாத்திரப்படைப்பு பாராட்டப்படவேண்டிய ஒன்று. குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே இசை சொந்தமானது இல்லை என சொன்ன விதம் அருமை நேர்மையான பதிவு. ‘வேம்பு ஐயர்’ நெடுமுடி வேணு, ‘தலித் கிருஸ்துவ இளைஞன்’ ஜி.வி.பிரகாஷ் இவர்களுக்கிடையே நடக்கும் உணர்ச்சி பூர்வமான வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொலைத்த தொலைக்காட்சிகளின் ‘ரியாலிட்டி ஷோவின்’ தில்லு முல்லுவை தோலுரித்திருப்பது ரசனை. அதையும் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியை வைத்தே ‘செஞ்சது’ கூடுதல் சிறப்பு! ஜி.வி.பிரகாஷ் பலவிதமான வத்தியங்களை கற்றுக்கொண்டு நுழைவது சற்றே நெருடல். கதாபாத்திரங்களுக்கேற்ற கலைஞர்களின் தேர்வு, ஒளிப்பதிவு, இசை ஆகியன படத்தின் சிறப்பான அம்சங்கள்.

விதயா கர்வத்திற்கேற்ற கனகச்சிதமான பாத்திரம் நெடுமுடி வேணுவுக்கு சூப்பராக நடித்திருக்கிறார் வழக்கம்போல். ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். குமரவேல், ஆதிரா என அனைவரும் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர்.

அனைவரும் பார்க்க வேண்டிய படம் சர்வம் தாளமயம்!

Advertisement

Cinema News

விரைவில்.. டேக் டைவர்ஸன்.

Published

on

By

இயக்குனர் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் படம், ‘டேக் டைவர்ஷன்’ . இதில்  ‘பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். இப்படத்தில் அறிமுக நாயகனாக சிவகுமார் நடிக்க, நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளனர்.  இவர்களுடன் ஜான் விஜய் தான்  வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய்,  பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும்  நடித்துள்ளனர்.

படத்திற்கு இசையமைத்துள்ளவர்  ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே  ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர். இந்தப்படத்தில் இசையமைப்பாளர் தேவா பாடி,  நடன இயக்குநர் சாண்டி நடனமாடியிருக்கும்   ‘மஸ்தானா மாஸ் மைனரு ‘ என்கிற கானா பாடல், இணைய உலகில்  லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

‘டேக் டைவர்ஷன்’ விரைவில் வெளியாக இருக்கிறது.

Continue Reading

Cinema News

சர்ச்சைக்குரிய சர்ஜுன் இயக்கும் புதிய படத்தில் கலையரசன், மிர்ணா!

Published

on

By

பல வெற்றிப்படங்களை விநியோகம் செய்த SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்,மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இதில் கலையரசன், அவரது  ஜோடியாக மிர்னா நடிக்கிறார்கள்.

‘மா’, ‘லட்சுமி’ உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய குறும்படங்களையும், நயன்தாரா நடித்த ‘ஐரா’ படத்தையும் இயக்கிய சர்ஜுன் இப்படத்தின் கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

ஒரு அசாதாரணமான சூழலில் தனிமையில் இருக்கும் பெண்ணை ஒரு இளைஞன் சந்திக்க நேருகிறது. அந்த சூழலில் நடக்கும் விஷயங்களை இருவரும் எவ்வாறு சந்தித்து, பயணித்து கடந்து போகிறார்கள் என்பதை சுவாரஸ்யமான, இதுவரை சொல்லப்படாத பின்னணியில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இயக்குனர் சர்ஜூன்.

Continue Reading

Cinema News

லலிதா ஷோபிக்கு ‘கேரள மாநில’ திரைப்பட விருது!

Published

on

By

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜின் மனைவி, லலிதா ஷோபி. இவரும் நடன இயக்குனராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

ஜெயசூர்யா, அதிதி ராவ் நடிப்பில் நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான `சுஃபியும் சுஜாதாயும்’ என்ற மலையாளப் படத்தில், லலிதா ஷோபி நடன இயக்குனராக பணியாற்றினார். சென்ற வருடம் வெளியான இப்படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பாராட்டை பெற்றதுடன், 51 வது கேரள மாநிலத்தின் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக லலிதா ஷோபிக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து நடன இயக்குனர் லலிதா ஷோபி கூறுகையில்,

“இந்த விருதை நம்மை விட்டு மறைந்த இயக்குனர் நரணிபுழா ஷாநவாஸ் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். அவருடன் பணியாற்றிய நாட்கள் மறக்கமுடியாதவை.

நான் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கையில்,  இப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு  கூறியிருந்தனர்.  அது இன்று நிறைவேறியுள்ளது.

மேலும் `சுஃபியும் சுஜாதாயும்’ படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கேரள மாநில திரைப்பட விருது குழுவினருக்கும் மற்றும் கேரள மாநில அரசுக்கும் இத்தருணத்தில் எனது  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.