சத்யராஜின் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற புதிய படத்தின் மூலம்  இதற்கு முன்பு பார்த்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில்  சத்யராஜ் நடிக்கவுள்ளார்.

ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் மீராசாஹிப் தயாரித்துவரும் இப்படத்தை தீரன் இயக்குகிறார்.

உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட, சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படமாக உருவாகவுள்ளதாம்.

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் இயக்குனர் தீரன் கூறும்போது,

“என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்த தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் சாருக்கு நன்றி. ஒரு தைரியமான நடிகரையும் தாண்டி இந்த திரைக்கதை ஒரு தைரியமான தயாரிப்பாளரை கோரியது. சஜீவ் மீராசாஹிப் சார் ஒரு தயாரிப்பாளராகவும், சத்யராஜ் சார் ஒரு ஹீரோவாகவும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.

படத்தின் கதாநாயகன் சமுதாய நீதியின் போர்வீரன். சத்யராஜ் சார் சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் ஒரே தேர்வாக இருந்தார். நான் அவரது எளிமை, அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்டேன்.

எங்கள் படத்தின் தலைப்பை அறிவிப்பதற்கு ஒரு நிஜ கள போராளி தேவைப்பட்டார் உடனே சமூக ஆர்வலர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை  படத்தின் தலைப்பை வெளியிட முடிவு செய்தோம்.’ என்றார்.

“கருடவேகா” (தெலுங்கு) புகழ்  ஒளிப்பதிவாளர் ஆஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாத் எஸ்.என் (யாமிருக்க பயமே மற்றும் காட்டேரி) இசையமைக்கிறார். எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத் எடிட்டராக அறிமுகமாகிறார். சுரேஷ் கல்லெரி (குட்டி புலி, ஜெயில்) கலை இயக்குனராகவும், நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

மற்ற  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.