Connect with us

India

மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

Published

on

மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான  சோம்நாத் சாட்டர்ஜி  உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு  வயது89. கடந்த 40 நாட்களாக வயது மூப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக கொல்கத்தாவில் உள்ள பெல்லி வேவ் கிளினிகில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார்.

சோம்நாத் சாட்டர்ஜி  2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக கட்சி வேறுபாடின்றி செயல்பட்டு உறுப்பினர்களின் அன்பையும், பாராட்டையும் பெற்றவர்.  அவர், 10 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அவரின் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்களும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

India

திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு!  மேன் கைண்ட் ஃபார்மா நிறுவனம் 31 லட்சம் நிதி!

Published

on

By

சென்னையை அடுத்த பையனூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் திரைப்பட தொழிலாளர்  சம்மேளனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு, இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமான மேன் கைண்ட் ஃபார்மா 31 லட்ச ரூபாய் நிதியை நன்கொடையாக வழங்கியது.

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான மேன் கைண்ட் ஃபார்மா, தரமான மருந்துகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கி வரும் சர்வதேச நிறுவனம். இந்நிறுவனம் மருந்துகளை உற்பத்தி செய்வதுடன் மட்டுமல்லாமல்,  லாபநோக்கமற்ற வகையில் சமூக சேவை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ”இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமாக திகழும் எங்கள் நிறுவனம், சமூக மேம்பாட்டிற்காக முன்னுதாரணமான சில நிகழ்வுகளில் பங்காற்றி வருகிறது. அந்தவகையில் எங்கள் நிறுவனம் இந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து செயல்படத் தொடங்கியிருக்கிறது.

திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் கட்டுமானத்திற்காக 31 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறது. பெஃப்ஸி என்பது தமிழ்நாட்டில் திரைப்படத் துறையில் பணியாற்றிவரும்  ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இயங்கி வரும் அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமாகும். இந்த சங்கத்தின் உறுப்பினராக இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த நலத்திட்ட உதவி, கொரோனா காலகட்டத்தில் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டிருப்பதுடன், தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு உதவும் வகையிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. இது சங்க உறுப்பினர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

எங்கள் நிறுவனம், சமூக முன்னேற்றத்திற்காக தன்னலமற்று  இயங்கிவரும் நிறுவனம். பாமர மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக நம்பிக்கையுடன் சேவையாற்றி வருகிறது. மேலும் பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்தத் தொகையுடன் மேலும் அவர்கள் தேவைகளை அறிந்து தொடர்ந்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” .

இதனிடையே பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய விழாவில், இந்நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு, 31 லட்ச ரூபாய் நன்கொடையை திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட விவரத்தை சம்மேளனத்தின் தலைவரான ஆர் கே செல்வமணியிடம் வழங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

Continue Reading

India

அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த நடிகர் ஶ்ரீகாந்த்! – சிவகுமார் பகிர்ந்த நினைவலைகள்!

Published

on

By

தமிழ் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகர் ‘தங்கப்பதக்கம்’ 82 வயதான ஸ்ரீகாந்த் நேற்று காலமானார்.  இவர் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அதில் ‘மேஜர் சந்திரகாந்த்’ எனும் வெற்றிகரமான நாடகத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘ஸ்ரீகாந்த்’. அதற்கு பிறகு நிலைத்த அடையாளமாக அந்த பெயர் அமைந்து விட்டது.

இது குறித்து தன் நெடு நாள் நண்பரின் மறைவையொட்டி நடிகர் சிவக்குமார் அவர் குறித்த  நினைவுக்குறிப்புகளை பகிர்ந்துள்ளதாவது…

‘நடிகர் ஶ்ரீகாந்த் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய  வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், சிவக்குமார், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர் நாயகனாகத் தோன்றினார். தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் கலைஞர்கள் போற்றக்கூடிய நடிகராக விளங்கினார்.

எனது அருமை நண்பர் திரு ஶ்ரீகாந்த் 1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஶ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார்.  ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணி புரிந்து, K பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஶ்ரீதர் , மேஜர் சந்திரகாந்த் என்ற கதையின் நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ஶ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமாகும்போது அதே பெயரையே ஒப்புக் கொண்டு நடித்தார்.

நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார், வாலி கவிதையால் கரை கண்டார். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட போது, தன் கையால் சமைத்து போட்டு, ‘மாம்பலம் கிளப் ஹவுசில்’ இருவரையும் காப்பாற்றியவர் ஶ்ரீகாந்த். கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் , ராஜநாகம்’ போன்ற முக்கிய படங்களில் முத்திரை பதித்தார்.  என்னோடு இணைந்து, ‘மதன மாளிகை, சிட்டுக் குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெக்கமில்லை , நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் 80 வயது பூர்த்தி அடைந்த விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஶ்ரீகாந்த் , லீலாவதி , மீரா கணவர் zach அலெக்சாண்டர், பேத்தி காவேரி ஆகியோரையும் சந்தித்து ஓவியம் , சினிமா என்று இரண்டு காஃபி டேபிள் புக்ஸை கொடுத்து வாழ்த்தி வந்தேன்.

இன்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

‘நடிகர்’ சிவகுமார்

Continue Reading

India

முதல்வரிடம் கோரிக்கை வைத்த பத்திரிக்கை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள்!

Published

on

By

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின்  யூனியன் நிர்வாகிகள் இன்று 11.10.2021  தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதனை சந்தித்தனர்.

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ், இணைச் செயலாளர் கணேஷ்குமார் ஆகியோர் அமைச்சரைச் சந்தித்து யூனியன் நலன் சார்ந்த 5 கோரிக்கைகளுடன் கூடிய மனுவை அளித்தனர். அந்த கோரிக்கைகளை படித்து பரிசீலித்த அமைச்சர் அடுத்த ஒரு மாதத்துக்குள் அவற்றை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

முன்னதாக தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின்  யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ், பொருளாளர் இரா.குமரேசன் சந்தித்து மேற்படி கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்  மு.பெ சுவாமிநாதனைச் சந்தித்து அந்த மனுவை அளிக்கக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே இச்சந்திப்பு மிகத் துரிதமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.