ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய காவல் ஆணையாளர்.

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த அருண் என்பவர் ஓலா நிறுவன ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். 10.08.2018ம் தேதி மேட்லி சாலையிலிருந்து மேற்கு மாம்பலம் சென்று கொண்டிருந்தபோது¸ முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்து பணம் அடங்கிய பிளாஸ்டிக் பை கீழே விழுந்தது.

அருண் பணம் அடங்கிய பையை மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் ஆட்டோ ஓட்டுநர் அருண் மூலம் பணத்திற்கு உரியவரான மகேஷ்குமார் என்பவரை அடையாளம் கண்டறிந்து ரூ.74¸000 பணம் அடங்கிய பையை ஒப்படைத்தனர். நேர்மையாக பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் அருணை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விஸ்வநாதன்¸ இ.கா.ப. அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

 

Leave A Reply

Your email address will not be published.