காவேரி மருத்துவமனைக்கு சென்ற விஜய் – கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தார்

சென்னை காவேரி மருத்துவமனையில்  கடந்த 5 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சீராக இருந்து வருகிறது.  அகில இந்திய அளவில் அரசியல், சினிமா துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் தொலைபேசியிலும், நேரிலும் வந்து விசாரித்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் நடிகர் விஜய் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்ஆகியோரிடம் நேரில் கேட்டறிந்தார்.

வழக்கமாக தான் பயண்படுத்தும் சொகுசு காரில் வந்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் சாதாரண வகை காரில் வந்து சென்றார். இதனால் அங்கிருந்த திமுக தொண்டர்கள் பத்திரிகையாளர்கள், ஆகியோருக்கு தெரியாமல்  உள்ளே வந்த அவர் செல்லும் போது வேறு வாசல் வழியாக சென்றார்

Leave A Reply

Your email address will not be published.