நொய்யலாற்றில் ஆலைக்கழிவுகளின் நுரை வெள்ளம்!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கோவை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இந்த வெள்ள நீரை பயண்படுத்திக்கொண்டு புட்டுவிக்கி பகுதியில் செயல்படும் சலவை ஆலையில் இருந்து  கழிவுநீரை  வெள்ள நீரோடு வெளியேற்றுவதாக அந்த சுற்று வட்டாரப் பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் ஆத்துப்பாலம், கரும்புக் காடு உள்ளிட்ட பகுதிகளில் தோலில் நுரை பட்டு அரிப்பு உண்டாகி  சரும பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும்  சலவை ஆலை மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.