முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகவும் கவலைக்கிடம்! – டெல்லி எய்ம்ஸ்

1924 டிசம்பர் மாதம் பிறந்த வாஜ்பாய். இந்திய விடுதலை போராட்ட வீரராக, பத்திரிகையாளர் முதல் பிரதமர் வரை பல்துறை  திறன் பெற்றவராக திகழ்ந்தவர்.அவர் உடல்நலிவுற்ற நிலையில் கடந்த 8 வாரங்களுக்கும் மேலாக  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வாஜ்பாய் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு  உயிர் காக்கும் சாதனங்களின் துணையோடு  சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று  காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மருத்துவர்களிடம் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். வாஜ்பாய் உடல்நலம் பெற வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கட்சி பாகு பாடின்றி அனைத்து தரப்பினரிடமும் நல்ல நட்பு பாராட்டியவர் வாஜ்பாய் என்பது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.