‘அடங்க மறு’ படம் விறுவிறுப்பாக இருக்கும் – எடிட்டர் ரூபன்

ஒரு ஒளிப்பதிவாளர் தான் ஒரு திரைப்படத்தின் முதல் பார்வையாளர்  என்று பொதுவாக கூறப்படுவதுபோல், ஒரு எடிட்டர் தான் முழுமையான விமர்சகர் ஆவார். ‘எடிட்டிங்’ புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி, தொலைதூரத்தில் இருந்த ஒரு துறையாக இருந்த போதிலும், அந்த இடைவெளியை இவர் மறைத்து விட்டார். ஆம், ரூபன் வெறுமனே எடிட்டிங் ட்ரான்சிஸன்ஸ் மட்டும் கவனம் செலுத்துவதற்கு மாறாக, ரசிகர்களின் துடிப்புகளை அறிந்து வைத்திருக்கிறார். ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட  திட்டமிடப்பட்டுள்ள அடங்க மறு படத்தில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

படத்தை பற்றி அவர் கூறும்போது, “அடங்க மறு’ படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும். வழக்கமாக, ஒரு படத்தின் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள், எடிட்டிங் டேபிளை அடையும் போது, காட்சியிம் உண்மையான உணர்வை கொடுக்க, பல கட்ட செயல்கள் தேவைப்படும். ஆனால், அடங்க மறு படத்தில் எடிட்டிங்கின் ஆரம்ப கட்டத்திலேயே அதன் முழு உணர்வையும் கொடுத்தது. என் மனதில் தோன்றிய  முதல் மற்றும் முன்னணி விஷயம், இந்த படத்தை தீவிர அக்கறையோடு எடிட் செய்ய வேண்டும் என்பது தான். ஒட்டு மொத்த குழுவுக்கும் நன்றி, குறிப்பாக, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் படம் நன்றாக வர பொறுமையாக இருந்ததற்கு நன்றி” என்றார் ரூபன்.

மேலும், இயக்குனர் கார்த்திக் தங்கவேல் பற்றி அவர் கூறும்போது, “ஸ்கிரிப்ட் டேபிள்’ அல்லது ‘எடிட்டிங் டேபிள்’ தான்  படத்தின் விதியை முடிவு செய்யும் என்று சொல்வார்கள். ஆனால் கார்த்திக்கின் சிறப்பான செயல்முறை என் வேலையை எளிதாக்கியது, அதே நேரத்தில், நல்ல அவுட்புட் கொடுக்க கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ரசிக்க வைக்கும் என வலுவாக நம்புகிறேன்” என்றார்.

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்த அடங்க மறு படத்தை தயாரித்திருக்கிறார்.