நடிகை இந்துஜா வின் ‘ஜில்ஜில் ராணி’ பாடல்!

ACTRESS INDHUJA ITEM DANCE VIRAL VIDEO

இணையவெளியில்  பதிவேற்றிய சில நிமிடங்களில் லட்சங்களைத் தொட்டிருக்கிறது ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் ‘ ஜில் ஜில் ராணி ‘ என்கிற பாடல். துருவா , இந்துஜா நடிப்பில் ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.கே இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டூப்பர்’.

முழுநீள கமர்சியல் பேக்கேஜ் ஆக உருவாகி வணிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப்படத்தில் நாயகி இந்துஜா ,’ஜில் ஜில் ராணி’ பாடலுக்கு ஆடிப்பாடி நடித்திருக்கிறார். அண்மைக்காலங்களில் இந்துஜா நடித்த ‘மேயாத மான்’, ’40 வயது மாநிறம்’ ,’மகாமுனி’ போன்ற  படங்களில்   குடும்பப் பாங்காகத் தோன்றினார்.

இந்த  ‘சூப்பர் டூப்பர்’ படத்தில் தைரியசாலிப்  பெண்ணாக நவீன புதுமைப் பெண்ணின் அவதாரமாக வருகிறார் . சுயவிருப்பமுள்ள  பெண்ணாக வருகிற அவர், தன் தோற்றத்திலும் கவர்ச்சியிலும் நடிப்பிலும் தனி முகம் காட்டுகிறார்.  .அதற்கான வரவேற்பு ரசிகர்களால்  இப்பாடலின் மூலம் கிடைத்திருக்கிறது.

‘ஜில் ஜில்  ராணி ‘பாடலுக்கு “லைக்”குகள் பெருகி வழிவதும் ஷேர்”கள் குவிவதும்  இந்தப் பாடல் பார்வையாளர்களால் ,ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வருகிறது என்று கூற வைக்கிறது.  ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் எதிர்பார்ப்பிற்கு ஒரு  முன்னோட்டமாக இப்பாடலின் வரவேற்பு  அமைந்திருக்கிறது எனலாம்.

Comments are closed.