“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”

“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”

புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தவர், அவரது நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான மறைந்த இப்ராஹிம் ராவுத்தர். இவரது நிறுவனமான ‘ராவுத்தர் மூவிஸ்’. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரி நடிப்பில் உருவாகி வரும் “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” எனும் படத்தை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார்.

“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார்.

விரைவில் “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இதன் முதல் பார்வை (FirstLook)போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்.

Comments are closed.