கண்ணீரில் மிதந்த KGF வில்லன் கருடா ராம்!

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் “AV33” . இப்படத்தில் வில்லனாக KGF படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும்  முடிவடைந்தது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த  KGF  படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்தவர் கருடா ராம். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல மொழிகளிலும் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.  இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லனாக நடித்து வந்தார். கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் துவங்கி  பழநி முதலான பகுதிகளில் நடைபெற்றது. தற்போது  இப்படத்தின்  இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் நடிகர் KGF புகழ் கருடா ராம் உடைய காட்சிகள் இன்றுடன் முடிக்கப்பட்டது.அவரை வழியனுப்பும் பொருட்டு படக்குழு மிகப்பெரிய கொண்டாட்டத்துடன்,  அவருக்கு  மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய்  மற்றும் இணை தயாரிப்பாளர் G.அருண்குமார் ஆகியோர்  அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இச்செயல்களால் அவர் ஆனந்த கண்ணீரில் மிதந்துள்ளார். KGF  படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன் ஆனால் இது போல் எந்த ஒரு படக்குழுவும் என்னை கொண்டாடியதில்லை. இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குநர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அருண் விஜய்,நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்  சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.