கிருத்திகா புரொடக்‌ஷன் வழங்கும் ‘கன்னித்தீவு’!

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு  அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’.
 
தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கவிருக்கிறார்கள்.
 
ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். 
சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார். ஸ்டண்ட் – ‘ஸ்டண்ட்’ சிவா, எடிட்டிங் – லாரன்ஸ் கிஷோர், தயாரிப்பு – கிருத்திகா புரொடக்‌ஷன்
 
சென்னையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

Comments are closed.