‘சர்கார்’ பிரம்மாண்ட இசை வெளியீடு! – பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு!

கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து இயக்குநர் முருகதாஸ் – விஜய் கூட்டணியில்  அதிரடி அரசியல் படமாக உருவாகி வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க,  இவர்களுடன் ராதாரவி, பழ.கருப்பையா வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, பிரேம்குமார் ஆகியோர்  நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச்செய்யும் வகையில் சர்கார் படத்தின் இசை வெளியீட்டை செப்டெம்பர் மாதம் மிக பிரம்மாண்டமான வகையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்காக பிரத்யோக வடிவிலான பெரிய மேடை ஒன்றை அமைக்கபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறப்பு விருந்தினர்களாக பல பாலிவுட் பிரபலங்களை அழைக்க இருப்பதாகவும் தெரிய வருகிறது.

தற்போது விஜய் சர்கார் படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். படத்தின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி நடந்து வருவதால் தீபாவளிக்கு வருவது உறுதி என்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.