ஜாதியை வளர்ப்பதற்காக படங்கள் வரக்கூடாது – பேரரசு!

முக்குழி பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘குழலி’ திரைப்படத்தை இயக்குனர் செரா. .கலையரசன், இயக்கியிருக்கிறார் . ‘காக்காமுட்டை’ திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக  நடிகை ஆரா இணைந்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் DM உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும்  தியாகு படத்தொகுப்பினை மேற்கொள்கிறார்கள் . இப்படத்திற்கான பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ளார் . ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறது .

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா,  சென்னையில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ஊர்வசி , இயக்குனர்கள் RV உதயகுமார் , பேரரசு ,ஜாக்குவார் தங்கம்  மற்றும்  நீட் தேர்வுக்கு எதிராக அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த ஆசிரியை  சபரிமாலா ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .

‘குழலி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஊர்வசி பேசியதாவது…

பல வருடங்களாக எனது அண்ணன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் நடக்கவில்லை. தற்போது அண்ணன் ஒரு படம் எடுத்திருக்கிறார் .அதை நினைத்து நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனந்த கண்ணீருடன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

பேரரசு பேசியதாவது…

கொரோனா காலத்திற்குப் பிறகு தற்போது தான் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஜாதியை ஒழிப்பதற்காக படங்கள்  வர வேண்டுமே தவிர அதை வளர்ப்பதற்காக வரக்கூடாது.

சமீப காலங்களில் வரும் ஜாதி படங்களுக்கு  சவுக்கடி கொடுக்கும் படமாக ‘குழலி’ அமைய வேண்டும்.

இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

Comments are closed.