ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நரேன் பாவனா நடிப்பில். மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் “சித்திரம் பேசுதடி”. இப்படம் முதலில் வெளியாகியாகிய போது நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மீண்டும் ஆஸ்கார் ரவிசந்திரன் இப்படத்தை வாங்கி ஆஸ்கார் பிலிம்ஸ் பேனரில் தமிழகமெங்கும் மறுவெளியீட்டில் படம் பெறும் வெற்றி அடைந்தது.
இன்றைய காலகட்டத்தில் படத்தின் மறுவெளியீடு என்பது இல்லாமல் போய்விட்டது.
கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.
Related Posts
தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியவில்லை.
இந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் இப்படத்தை பார்த்த மக்கள் கூறிய நிறை குறைகளை ஆராய்ந்து பல மாறுதல்களை செய்து புது பொலிவுடன் கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது “தாதா 87”.
காதலை கவிதைத்துவமாக சொல்லப்பட்ட தாதா 87 படத்தில் தணிக்கை குழுவினர் 27 கட்டுகள் வைத்தும் படத்தின் தணித்தன்மையை மக்கள் புரிந்து கொண்டு கொண்டாடினர்.
Comments are closed.