ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்தவர், 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன். இவர் தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் “ருத்ரன்” படத்தை தயாரித்து இயக்குகிறார்.

K.P.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை செய்கிறார்.

இதுவரை தயாரிப்பாளராக இருந்த S.கதிரேசன் “ருத்ரன்” படத்தின் இயக்குனராக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

Comments are closed.