விஜய்யின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தவர் P.T.செல்வகுமார் !  இயக்குனர் பேரரசு பாராட்டு  !

ராஜாவூர் லயோலா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கலப்பை இயக்க தலைவர் P.T.செல்வகுமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்தியாவிலேயே கொரானா காலகட்டத்தில்  அதிக சேவை மற்றும் மாணவர்களுக்கு கல்வி கூடம், மருத்துவாழ்மலை மூலிகை தியான மண்டபம், குருசுமலை தோமையார் ஆலயம், மலைகுகை மாதா கோயில் மற்றும் தனிப்பட்ட முறையில்  கொரானா காலத்தில் 175 நாட்களுக்கு மேல் ஏழை எளியோருக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள், நிதியுதவி வழங்கி தொண்டாற்றி வரும் பிடி செல்வகுமாருக்கு பாராட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்றது.

விழாவில் பேசிய பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு பேசுகையில் “பிடி செல்வகுமார் அவர்கள் கலை துறையில் மிக சிறந்த மனிதர்களுள் ஒருவர் ! நான் இங்கு வந்தபொழுது P.T.செல்வகுமாரின் கல்வி சேவை, குபேரன் மலை, மூலிகை தியான மண்டபம், குருசுமலை குகை மாதா கோவில், பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தல், ஏழை எளிய கிராமியக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு கால்நடைகள் வழங்குதல் போன்ற அவருடைய பல்வேறு நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டேன்.

அவருடைய பாராட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். நல்ல மனிதர்களுடைய சேவைகள் நாட்டுக்கு தெரியவேண்டும் எதிர்கால இளைஞர் சமுதாயம் இவரைப் போன்று சேவை மனப்பான்மை உடையவர்களாகவும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் .

அதற்கு ஒரு முன்னுதாரணமாக P.T.செல்வகுமார் அவர்கள் இருக்கிறார் .நான் “இளைய தளபதி” விஜய்யை வைத்து படத்தை இயக்கி இருக்கிறேன். திரைப்படமும் பெரிய வெற்றி பெற்றது பேரரசு என்ற பெயர் தமிழ் திரையுலகில் தெரிய காரணம் இளைய தளபதி விஜய் தான். ஆனால் இளையதளபதி விஜய் அவர்கள் திரைத்துறையில் நுழையும் பொழுது ஆரம்ப காலகட்டத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்! மிகவும் கஷ்டப்பட்டார்! ஆனால் அவருக்கு பின்புலமாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி இன்று தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய திரை   உலகிலேயே ஒரு மிகப் பெரிய நடிகராக வலம் வர  முகதுகெலும்பாக இருந்தவர் P.T.செல்வகுமார் அவர்கள் தான் இருந்திருக்கிறார்!!

விஜய் அவர்களின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவருடைய வளர்ச்சி பாதை வரை பிடி செல்வகுமாரின் பங்கு மிகப்பெரியது ! அப்பேர்ப்பட்ட ஒரு நல்ல மனிதரை பாராட்டுவதில் நான் பெருமை அடைகிறேன். உங்களுக்கெல்லாம் சேவைகள் செய்வதற்கு ஒரு மிகச்சிறந்த மனிதர் கிடைத்து உள்ளார் அவரை போன்று அடுத்தவர்களும் சேவை நோக்கம் கொண்டவர்கள் ஆக வரவேண்டும். அவருடைய இந்த சேவைகள் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய மாநிலம் முழுமைக்கும் சென்றடைய வேண்டும். அவரை முன்னுதாரணமாக கொண்டு இளைஞர்கள் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.