அட்ரஸை தொலைத்த கிராமம் தான் ‘அட்ரஸ்’ படம். இயக்குனர் இராஜமோகன்.

‘காக்டைல் சினிமா’ சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் ‘அட்ரஸ்’. ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்களை இயக்கிய இராஜமோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அட்ரஸ்’ படத்தில், இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

விரைவில் வெளிவரவிருக்கும் ‘அட்ரஸ்’ படத்தின் இயக்குனர் ராஜ்மோகன் கூறியதாவது..,

‘நமது நாட்டு பிரதமலிருந்து, முதலமைச்சர், வார்டு கவுன்சிலர் வரை நியூஸ் சேனலில் கிராமங்கள் கணினி மயமாகிறது. என கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது திருநெல்வேலி வரை உள்ள கிராமங்கள் மட்டுமே, அதை தாண்டிய இடங்கள் கிராமமாக இவர்களுக்கு தெரியவில்லை.

கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையில் ஒரு கிராமம் உள்ளது அந்த கிராமத்திற்கு, 2015-ல் தான் அட்ரஸ் கிடைத்தது. இந்தியாவிற்கும், பங்களாதேஷிற்கும் இடையில் 15,000 பேர் உள்ள ஒரு கிராமம் உள்ளது, அந்த கிராமம் சில வருடங்கள் முன்னரே இந்தியாவுடன் இணைந்தது, இதனை செய்திதாளில் நான் வாசித்தேன். ஒரு உண்மை சம்பவத்தை கற்பனை கலந்து இந்த படத்தில் கூறியுள்ளேன்.

இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அருமையான படைப்பாக உருவாகியுள்ளது இப்படம்.

நட்புக்காக நடிகர் அதர்வாமுரளி காளி எனும் முக்கிய பாத்திரமொன்றில்  நடித்திருக்கிறார்.  இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி,  ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன்,  கோலிசோடா முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கிறார்கள்.

நடிகர் இசக்கி பரத் நன்றாக நடிக்க கூடியவன், பெரும் உழைப்பை அளித்துள்ளான். படத்தின் ஹீரோயின் தமிழ் தெரியாமல் வந்து இப்போது தமிழ் கற்று உள்ளார். தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணிக்கு சாருக்கு  பெரிய நன்றிகள்.

இப்படத்திற்கு  கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.