உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ‘அன்புள்ள கில்லி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Rise East Entertainment Pvt Ltd மற்றும்  Master Channel சார்பில் ஶ்ரீநிதி சாகர், E. மாலா இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அன்புள்ள கில்லி’ இப்படத்தினை ராமலிங்கம் ஶ்ரீநாத் என்பவர் இயக்கியிருக்கிறார்.

‘அன்புள்ள கில்லி’ செல்லப்பிராணிகளின் மேல் அன்பு கொண்ட அனைவருக்குமான படம் என்கிறார் படத்தின் இயக்குனர் ராமலிங்கம் ஶ்ரீநாத். மேலும் படம் குறித்து கூறியதாவது..

‘அன்புள்ள கில்லி’ திரைப்படம்  இதுவரை வெளியான மனிதன், நாய் உறவு சம்பந்தமான கதைகளிலிருந்து மாறுபட்ட படமாகும். நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா நடிக்கிறார். அவருடன் ‘லேப்ராடர்’ வகை நடிக்கிறது.

குடும்பங்கள் கொண்டாடும் ஒரு  கமர்சியல் படமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை கொண்டாடுவார்கள். கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ள ‘அன்புள்ள கில்லி’ வரும் கோடை விடுமுறையில் வெளியிடப்படுகிறது என்கிறார், இயக்குனர் ராமலிங்கம் ஶ்ரீநாத்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Comments are closed.