தம்மாத்துண்டு பாடலில் நடித்த அர்ச்சனா, அருள்நிதியுடன் நடிக்கிறார்!

குறுகிய காலத்தில் தன் நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா.  2019ல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர்,

அதன்பிறகு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் “ராஜா ராணி-2” என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

அதனைத் தொடர்ந்து  ‘லவ் இன்சூரன்ஸ்’, ‘ட்ரூத் ஆர் டேர்’ ஆகிய குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் “எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி” என்ற இணையத் தொடரிலும் (web series ) நடித்துள்ளார்.

அன்மையில் ’ஸோனி மியூசிக்’, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில் வெளியிட்ட ஒரு நிமிடப் பாடலான ‘ தம்மாத்துண்டு ‘ எனும் பாடலில் நடித்துள்ளார். இப் பாடல் சமூக வலைதளங்களில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிதத்தக்கது.

தமிழ்ப் பெண்ணான இவரது ஆசை திரைத்துறையில் சிறந்த கதாநாயகியாக வலம்வரவேண்டும் என்பதே. தற்பொழுது அருள்நிதி  நாயகனாக நடிக்கும் “டிமாண்டி காலனி – 2” என்ற திரைப்படத்தில் அருள்நிதிக்கு தங்கையாக நடிக்க இருப்பதன்மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் கால்பதித்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய பிற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பேன் என்று மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.