கிராமத்து பின்னணியில் நடிகர் ஆர்யா நடிக்கும் புதியபடம்!

இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை தந்த  ஜீ ஸ்டூடியோஸ் & டிரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஆர்யா 34 படத்தை தயாரிக்கின்றன. “டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன்” என   மாறுப்பட்ட படங்கள் மூலம் தொடர் வெற்றிகளை தந்து வரும் நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் உடன் இணைந்தது குறித்து  ஜீ ஸ்டுடியோவின் சவுத் மூவிஸ் தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால் கூறுகையில்…,

“இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் எங்களது அடுத்த திரைப்படத்தில்  ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் உடன்  இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆர்யா தொடர்ந்து  மாறுப்பட்ட பாத்திரங்களில்  வித்தியாசமான படங்கள் மூலம்  பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இயக்குநர்  முத்தையா அனைத்து தரப்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து கொண்டவர். இவர்கள் கூட்டணி பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் என்பது உறுதி. பல அற்புதமான படங்களை வழங்கிய ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ்  நிறுவனத்துடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

கிராமத்து பின்னணியில் அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா இப்படத்தினை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார். விரைவில் படத்தை பற்றிய மற்ற செய்திகளை வெளியிடுவோம். என்றர்.

Leave A Reply

Your email address will not be published.