இறுதிகட்ட பணியில் ‘ஹாஸ்டல்’ படம்.

பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்தவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர்.

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் “ஹாஸ்டல்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இறுதிகட்ட பணிகளில் மும்முரமாக படக்குழு இறங்கியுள்ளது

Comments are closed.