ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண் கேசவன் தயாரிக்கும் படம், ‘ஈடாட்டம்’. இதில், சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ‘ஸ்ரீ ‘ கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகைகள் வெண்பா, அணு கிருஷ்ணா, தீக்ஷிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை எழுதி , இயக்கியிருக்கிறார் ஈசன்.
ஈடாட்டம் படம் குறித்து இயக்குனர் ஈசன் கூறியதாவது..
வறுமையில் வாழும் ஒருவர் பணத்தேவைக்காக தவறான முடிவுகளை எடுக்கிறார். அதனால், அவர் மட்டும் இன்றி அவரை சார்ந்தவர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற மெசஜை காதல், காமெடி, செண்டிமெண்ட் என கமர்ஷியலாக சொல்வது தான் இப்படத்தின் கதை. என்கிறார்.
யோகி பாபு, நடன இயக்குநர் தினேஷ் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கும் ‘லோக்கல் சரக்கு’ படத்திற்கு இசையமைத்திருக்கும் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘லோக்கல் சரக்கு’ படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை போல், ‘ஈடாட்டம்’ படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கஜபதி வசனம், திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
திருச்செந்தூர், பாண்டிச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.