நடிகர் ஆதி நடிக்கும் “தி வாரியர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் ராம் பொதியேனி நடிக்கு  “தி வாரியர்”  ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் முதன்முறையாக பிரபல இயக்குனர் N லிங்குசாமியுடன் ஜோடி சேர்ந்துள்ளார், மேலும் இந்த படம், இருமொழிகளில் தயாராவதுடன், கோலிவுட்டில் ராமின் அறிமுக படமாகும்.

இப்படத்தில் நடிகர் ஆதி பினுஷெட்டி இதுவரை பார்த்திராத வலுவான வில்லன் வேடத்தில் நடிக்கின்றார். இன்று, மகா சிவராத்திரி அன்று, “தி வாரியர்” படத்தின் குழுவினர் ஆதியின் ஃபர்ஸ்ட் லுக்  தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் ஆதி,  குரு என்ற கதாபாத்திரத்தில் தீய செயல்களுக்கே தலைவனாக இருக்கும் ஒரு மிரட்டலான பாத்திரத்தில்  நடிக்கிறார். அவரது கடுமையான தோற்றம் மற்றும் மிரட்டும்  லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

இயக்குநர் லிங்குசாமி தனது ஆக்‌ஷன் கமர்ஷியல் படங்களுக்காக புகழ் பெற்றவர், ராம் மற்றும் ஆதி இருவரும் திரைப்படங்களில் தங்கள்  சிறந்த நடிப்பை கொடுப்பதில் வல்லவர்கள். படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் (அவர் பெயர் விசில் மகாலட்சுமி), அக்‌ஷரா கவுடா ஒரு முக்கிய பாத்திரத்திலும் மற்றும் ஆதி பினுஷெட்டி வில்லனாக நடிக்கின்றனர்.

Srinivasaa Silver Screen நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி மிக பிரமாண்ட  பட்ஜெட்டில் தயாரிக்கும் “தி வாரியர்” படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்குகிறார். சீடிமார் திரைப்பட  வெற்றிக்கு பிறகு, Srinivasaa Silver Screen நிறுவனத்தின் தயாரிப்பில்  ‘தி வாரியர்’ திரைப்படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.