பல வருடங்களுக்குப் பிறகு நடிக்கவந்த பிரபல இயக்குனர்!

கோழிகூவுது,எங்க ஊரு பாட்டுக்காரன், செண்மகமே செண்பகமே, கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனரும், பிரபல இசை அமைப்பாளருமான கங்கை அமரன், அவ்வப்போது சில கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர்.

சில நாட்கள் ஓய்விலிருந்த அவர், டைரக்டர் ஹரி இயக்கி, அருண்விஜய் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத  படத்தில்  நடித்துள்ளார். காரைக்குடியில் நடந்து வரும் அந்தப்படத்தின் படப்பிடிப்பில்,கதையின் ஒரு முக்கிய காட்சியில் ‘ஜோசியராக’ நீண்டநாளுக்குப்பின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராமேஸ்ரவத்தில் தொடர்ந்து  நடைபெறும். ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் இந்தப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். இவர்களுடன்  ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.