சாதிப் பிரச்சனையை மய்யமாக கொண்டு உருவாகும் ‘உலகம்மை’

திருநெல்வேலியில் ‘1970’ களில் நடந்த ஒரு சாதிப்பிரச்சனையை மய்யமாக கொண்டு உருவாகி வரும் படம் ‘உலகம்மை’. இந்தப்படத்தை வி.ஜெய்பிரகாஷ் இயக்கி, தனது SVM புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இவர் ஏற்கனவே பாய்ஸ் மணிகண்டன், ஷிவானி நடிப்பில் வெளியான ‘காதல் எஃப் எம்’ படத்தினை தயாரித்து இயக்கியவர். இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

“உலகம்மை” படத்தில் 96, மாஸ்டர், கர்ணன் ஆகிய படங்களில்  நடித்த நடிகை கௌரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க உடன் மாரிமுத்து, G.M.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய ‘ஒரு கோட்டுக்கு வெளியே’  நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா  இசையமைக்கிறார்.

‘ஒரு கோட்டுக்கு வெளியே’  நாவலை படமாக்க பலரும், அதை எழுதிய எழுத்தாளர் சு.சமுத்திரத்திடம் அட்வான்ஸ் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.