அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடித்த ‘ஹாஸ்டல்’ ஏப்ரல் 28 ல் வெளியாகுகிறது!

Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”.  அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பட முன்னோட்ட விழாவாக, படக்குழு இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இவ்விழாவினில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் கூறியதாவது…

எனது முந்தைய படத்திற்கு நல்ல ஆதரவை தந்தீர்கள். இப்போது ஒரு பெரிய டீமுடன் வந்துள்ளேன். தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் எங்களுக்கு பிடித்துள்ளது, இது ஒரு சிம்பிளான படம் உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் சதீஷ் கூறியதாவது…

ரொம்ப ஜாலியா வேலை பார்த்த படம். எல்லோரும் வாழ்க்கையில் அனுபவித்த கதைதான். நான் ஹாஸ்டலில் படித்ததில்லை ஆனால் நண்பன் ஹாஸ்டல் போய் தங்கியிருக்கிறேன். அந்த நினைவுகளை இந்தப் படம் தூண்டிவிடும். அசோக் செல்வன் நடித்த ஒரு படம் சமீபத்தில்தான் வெளியானது. இப்போ அடுத்த படத்தோடு வந்து விட்டார். அவர் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதை பார்க்க பொறாமையாக இருக்கிறது. பிரியா நெருங்கிய தோழியாக மாறிவிட்டார். நாசர் சார் மகளிர் மட்டும் படத்திற்கு பிறகு நல்ல காமெடியோடு நடித்துள்ளார். சுமந்த் முன்னதாகவே எனக்கு நண்பர். படத்தை நன்றாக எடுத்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை பிரியா பவானி சங்கர் கூறியதாவது,

இது போன்ற ஒரு குழுவுடன் இணைந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அசோக் செல்வன், சதீஷ் மற்றும்  மற்ற நடிகர்களுடன் நடித்தது அற்புதமாக அனுபவமாக இருந்தது, இந்தப் படத்தின் ஷூட்டிங் சிரமமின்றி மிகவும் எளிதாக நடந்தது, அதற்கு காரணமான தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு ஆயிரம் நன்றிகள் சொல்ல கடமை பட்டிருக்கிறேன், இந்தப் படத்தை  ஒளிப்பதிவாளர் பிரவீன் சார் மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார், மேலும் போபோ சசி அழகான பாடல்களை கொடுத்துள்ளார், நாசர் சாருடன் முதல் முறை பணி புரிந்தது, அற்புதமான அனுபவமாக இருந்தது, இந்தப் படத்தில் அவருடன் ஒரு சில காட்சியில் மட்டும் தான் நடித்துள்ளேன், ஆனால் மேலும் அவருடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க போகிறேன், எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்த இயக்குனர் சுமந்த் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன், ஹாஸ்டல் படம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த படமாக இருக்கும், சதிஷுடைய அடுத்தடுத்த படங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அசோக் செல்வன் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார், அவருடைய கடின உழைப்பு அவரை மிகப் பெரும் உயரத்திற்கு கொண்டு செல்லும். நன்றி.

நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது..

எனது அனைத்து திரைப்படங்களுக்கும் ஆதரவளித்த ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இந்த திரைப்படம் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி. ஆரம்பத்தில், இந்த திரைப்படத்தில் நடிக்க எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் சுமந்த் படத்தின் சாராம்சத்தை மட்டும் எடுத்துவிட்டு ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றியிருந்தார். பிரியா நன்றாக நடித்துள்ளார், சிறந்த மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிகையாகிவிட்டார். சதீஷ் தனித்துவமான ஸ்கிரிப்ட்களுடன் முன்னணி பாத்திரத்தில் நடித்து, பெரிய உயரங்களை எட்டத் தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். க்ரிஷ் மற்றும் யோகி அவர்கள் ஹாஸ்டல் போன்ற நல்ல திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதற்கு நன்றி. நாசர் சார் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர், அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முனிஸ்காந்த், ரவி மரியா சார், அறந்தாங்கி நிஷா மற்றும் ஏனைய நடிகர்கள் அவர்களது பணியை சிறப்புடன் ஆற்றியுள்ளனர். அனைவரும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். ரவி மரியா சார் சொன்னது போல, நகைச்சுவை ஒரு சீரியஸ் பிசினஸ். நாங்கள் அதை முழு மனதுடன் செய்ய முயற்சித்தோம். அவர் கூறியது போல், அனைவரும் அனுபவித்து பாராட்டுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.