அமேசான் ப்ரைம் வீடியோவில் நவம்பர் 2 ஆம் தேதி முதல் ‘ஜெய் பீம்’ பவர்!

தா. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும்’ ஜெய் பீம்’ திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின், 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில், நடிகர் சூர்யாவுடன் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை உலகம் முழுவதும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.

‘ஜெய் பீம்’  டீஸர் வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடம் சரியான ஆர்வத்தை உருவாக்கியிருக்கும் நீதிமன்ற வழக்காடல் காட்சி, பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சூர்யாவையும் அவரது அட்டகாசமான நடிப்பையும் காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

‘பவர்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.  அறிவு எழுதிப் பாடியிருக்கும் இந்தப் பாடலை ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். துள்ளலான இந்தப் பாடல், நேர்மையைப் பற்றியும், சமத்துவத்தை அடைய இருக்கும் போராட்டங்களைப் பற்றியும் பேசுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியும், சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்று பாடுபடும் சூர்யாவின் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை இந்தப் பாடலில் பார்க்கலாம். அதிக உத்வேகத்தோடு இருக்கும் இந்தப் பாடல் கண்டிப்பாக உங்களைத் தலையாட்ட வைக்கும். உங்கள் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.