சிலம்பரசனுக்கு ஜோடியாக, கயாடு லோஹர்!

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் படம், ‘வெந்து தணிந்தது காடு’. சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு அம்மாவாக ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.

இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக மராத்தி பெண் ‘கயாடு லோஹர்’ நடிக்கிறார். இவர் வினயனின் பதொண்பதாம் நூற்றாண்டு  மலையாள படத்தில் நடித்தவர்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, ஜெயமோகன் எழுத்தாளராக இணைந்துள்ளார். சிலம்பரசன் இந்தப் படத்திற்காக உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளது, குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.