சிபிராஜ் நடிக்கும் “மாயோன்” ரிலிஸூக்கு தயார்!

Double Meaning Productions தயாரித்து வரும் படம் ‘மாயோன்’. இப்படத்தில் நடிகர் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், K.S.ரவிக்குமார், ராதாரவி மற்றும் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘மாயோன்’ படம்  துவக்கத்திலிருந்தே, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பினை உருவாக்கி வந்துள்ளது.

மர்மங்கள் நிறைந்த, சாகசப் பயணத்தை வெளிப்படுத்தும், இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. நடிகர் சிபிராஜ் படத்திற்கான தனது பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளார்.

‘Double Meaning Productions’  சார்பில் தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது..

திரைக்கதை எழுத்தாளராக,  மாயோனுடனான எனது பயணம், ஒரு தனித்துவமான, சிறப்பான அனுபவத்தை அளித்துள்ளது. இயக்குனர் கிஷோர் திரைக்கதையை சரியாக உள்வாங்கிகொண்டு,  சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன், படத்தை வடிவமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படைப்பு சரியாக உருவாவதற்கு, முழு ஆதரவு தந்து உழைத்த, நடிகர் சிபிராஜ் அவர்களுக்கு நன்றி.

எல்லாவற்றிற்கும் மேலாக, இசைஞானி  இளயராஜா அவர்கள் இப்படத்திற்கு இசையமைப்பது, எங்கள் குழுவினர் அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.  “மாயோன்” எங்கள்  மொத்த குழுவினரும், மிகுந்த அர்ப்பணிபுடன் உருவாக்கியுள்ள படைப்பு. தற்போது படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள்  நிறைவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் மற்றும் உலகளாவிய திரை வெளியீட்டு தேதியை,  விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளோம், என்றார்.

Leave A Reply

Your email address will not be published.