வரலாறு முக்கியம்  படத்தின் “மல்லு கேர்ள்” பாடலுக்கு பெரும் வரவேற்பு!

நடிகர் ஜீவாவின் “வரலாறு முக்கியம்” திரைப்படத்திலிருந்து ஷான் ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள இரண்டாவது சிங்கிள் டிராக் – ‘மல்லு கேர்ள்’ வெளியாகி, பரபரப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

அனைத்து வகை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகர் ஜீவா, தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு  சிறந்த பொழுதுபோக்கை தருவதில் எப்போதும் தவறியதில்லை. அவரது முந்தைய படங்களைப் போலவே, அடுத்ததாக அவரது நடிப்பில் வரவிருக்கும் ‘வரலாறு முக்கியம்’ படத்தின் மீதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இப்படத்திலிருந்து வெளியான  முதல் சிங்கிள் பாடலான – பொத்தி பொத்தி வளத்த புள்ள, பாடல் படம் 100% குடும்பங்கள் கொண்டாடும்  பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை, உறுதிப்படுத்துவதாக இருந்தது. தற்போது  இரண்டாவது சிங்கிளான – ‘மல்லு கேர்ள்’ பாடல், இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் தென்னிந்திய இசைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், குறிப்பாக அவரது சார்ட்பஸ்டர் ஹிட்டான ‘ஜிமிக்கி கம்மல்’ ஒரே இரவில் வரலாறு காணாத  வெற்றியடைந்தது. பெப்பியான இசை மற்றும் ஆற்றல்மிகு குரலுக்காக அவர் பரவலான  பாராட்டுக்களை பெற்றுள்ளார். அதிரா A நாயரின் அட்டாகச குரலுடன்  இணைந்து அவர் பாடியுள்ள இப்பாடல் பெரும் வசீகரமாக அமைந்துள்ளது. இம்மாதிரி பெப்பி பாடல்களில் ஜீவாவின் நடனம்  மேலும் அழகானதாக இருக்கும். ஆகவே இப்பாடலின் விஷுவலை காண ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள வரலாறு முக்கியம் திரைப்படத்தில், ஜீவா மற்றும் காஷ்மீரா பரதேசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.