இயக்குனர் மாரி செல்வராஜ் புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் சென்னையில் தான் கட்டியிருக்கும் தனது புதிய இல்லத்திற்கு குடும்பத்தோடு குடியேறினார்.

மாரிசெல்வராஜ் அவர்களின் குருநாதர் இயக்குனர் ராம் அவர்களின் ஆசிர்வாதத்தோடு நடந்த இந்த நிகழ்வில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தானு மற்றும் திரையுலத்தை சார்ந்த நெருக்கமான நண்பர்கள் கலந்துகொண்டார்கள். இவர்களோடு இயக்குனர் மாரியின் மூன்றாவது பட நாயகனும் தயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று இயக்குனர் மாரி செல்வராஜ் இல்லதிற்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.