சிரஞ்சீவியின் படத்தை இயக்கும் மோகன்ராஜா! பிப்ரவரியில் படப்பிடிப்பு!

மிகப்பெரிய பட்ஜெட்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கியிருந்த படம், வேலைக்காரன். இந்தப்படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதன்பிறகு படங்களை இயக்காமல் இருந்தார் மோகன்ராஜா.

மோகன்ராஜா தற்போது கொனிடெலா தயாரிப்பு நிறுவனம், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். அவருக்கு இது 153 வது படமாகும்.

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்திற்கு ஃபிலிம் நகரில் உள்ள சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் பூஜை நடத்தப்பட்டது. திரைப்பட பூஜையில் அல்லு அரவிந்த், அஸ்வினி தத், டிவிவி தனய்யா, நிரஞ்சன் ரெட்டி, மெகா பிரதர் நாகபாபு, இயக்குநர் கொரட்டல்லா சிவா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

Comments are closed.