தர்புகா சிவாவின் ‘முதல் நீ முடிவும் நீ’  ஜனவரி 21 ஆம் தேதி வெளியாகிறது! 

‘முதல் நீ முடிவும் நீ’  இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமா திரைப்படம் ஆகும். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது

‘நியூயார்க் திரைப்பட விருது விழாவில்,  ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்பு மிகு கௌரவ விருதை (Honourable Mention) வென்றுள்ளது. மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது விழாவினில்  இத்திரைப்படம் ‘சிறந்த இயக்குனர்’ விருதினையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர, உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரை விழாக்களில் இப்படம் அதிகாரப்பூர்வமாக  தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“முதல் நீ முடிவும் நீ” திரைப்படத்தில், அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், K.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் CSV, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை எழுதி இயக்குவதுடன், இயக்குநர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.

ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்  முக்கிய அம்சமாக  இசை கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தின் இசைப் பாடல்கள், ஏற்கனவே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, சித் ஸ்ரீராம் குரலில், பாடலாசிரியர்  தாமரை எழுதிய இப்படத்தின் டைட்டில் பாடல், பல்வேறு வானொலி நிலையங்களின் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இசையமைப்பாளர் தர்புகா சிவா ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் இயக்குநராக தனது பயணத்தை துவங்கியுள்ளார், சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ளார். இப்படம் ஜனவரி 21, 2022 அன்று ZEE5 இல் வெளியாகிறது.

Leave A Reply

Your email address will not be published.