‘நட்புனா என்னானு தெரியுமா’ மே 17 ஆம் தேதி ரிலீஸ்

லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள “ நட்புனா என்னானுதெரியுமா” என்ற தமிழ்திரைப்படத்தை “ க்ளப் போர்டு ப்ரொடக்ஷன்” நிறுவனத்தின் மூலம் வரும் மே மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தை லிப்ரா ப்ரொடக்ஸன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.
சிவா அரவிந்து இயக்க, யுவராஜ் கேமராமேன் ஆக பணியாற்றி உள்ளார் .தரண் இசை அமைக்க , சதீஷ் கிருஷ்ணன் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

அறிமுக நாயகன் கவின் ஹீரோவாகவும் , ரம்யா நம்பீசன் ஹீரோயின்ஆகவும் , அருண்ராஜா காமராஜா மற்றும் ராஜு ஹீரோவுக்கு இணையான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் இளவரசு , அழகம்பெருமாள் ,மன்சூர்அலிகான் , மொட்டராஜேந்திரன் , ராமா , பபிதா , மதுரை ஆச்சி சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிறுவயது முதல் ஒன்றாக படித்து பழகி பிசினஸ் செய்துவரும் மூன்று நெருங்கிய நண்பர்களுக்கு இடையே ஒரு பெண்ணைப் பார்த்ததும் உருவாகும் காதல் , அதனால் அவர்கள் நட்பில் , தொழிலில் , வாழ்க்கையில் ஏற்படும் அடுத்தகட்ட நகர்வு தான் இப்படத்தின் கதை. சுவாரஸ்யமாக காமெடியான பாணியில் நல்ல இனிமையான மற்றும் இளமையான பாடல் பதிவுகளுடன் நமக்கு கொடுத்திருப்பது சிறப்பு .

Comments are closed.