நிவின்பாலி – அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாநாடு’ படத்தை தயாரித்துள்ள, சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ்’ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது.

‘வி ஹவுஸ்’ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ஏழாவது படத்தினை, தேசிய விருதுபெற்ற இயக்குநர் ராம்  இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு, ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

‘கற்றது தமிழ்’, ‘பேரன்பு’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பது குறிப்பிடதக்கது. இந்தப்படத்திற்காக அஞ்சலி தனது சம்பளத்தின் ஒரு பகுதியை குறைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சூரி காமெடி கதாபாத்திரத்தில் இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் நடிக்கவிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கபடவிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.