‘மாநாடு’ படத்தயாரிப்பாளரின் அடுத்தப்படத்தில் ‘நிவின்பாலி – அஞ்சலி’ ஜோடி!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தை, சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

‘மாநாடு’ படத்தின் வெளியீட்டு வேலைகளில் மும்மரமாக இயங்கிவரும் சுரேஷ்காமாட்சி, தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ராம் இயக்கும் இந்தப்படத்தில்,  மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலியும் நடிகை அஞ்சலியும் இணைந்து நடிக்க உள்ளனர். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்தப்படத்தில் நடிப்பது பற்றி நடிகை அஞ்சலி கூறும் போது..

‘இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கும் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். அவருடன் பணிபுரிவது எனக்கு எப்பவுமே மகிழ்ச்சியாக இருக்கும். நடிப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன்’ என்று கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.