“ஓ மை டாக்” ஏப்ரல் 21ம் தேதி வெளிவர இருக்கிறது.

‘ஓ மை டாக்’ திரைப்படம் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், 240 நாடுகளிலும் மற்றுமுள்ள பிரதேசங்களிலும் ஏப்ரல் 21ம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படம் ” 2D  என்டர்டெய்ன்மென்ட்” பேனரில் தயாரிக்கப்பட்டு,  சரோவ் ஷண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது.  இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த (தாத்தா, அப்பா, மகன் மூவரின்)  கதாபாத்திரங்களின் உண்மையான குடும்பக் கதையாகும்.  அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் பிரத்யேகமாக தமிழ், தெலுங்கு மொழிகளில்  மட்டும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் கண்டு மகிழலாம்.

இப்படம் ஒவ்வொரு குழந்தையும், செல்லப்பிராணியை  விரும்புபவர்களும் கண்டிப்பாகப்  பார்க்க வேண்டிய ஒன்று.  ” ஓ மை டாக்” அர்ஜூன் (அர்னவ்) மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா பற்றிய உள்ளத்தை தொடும் கதையாகும்.  எல்லா குடும்பங்களிலும் சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள், ஆசாபாசங்கள், முதல் முக்கியத்துவம், கவனிப்பு,  தைரியம், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற காதல் மற்றும் விஸ்வாசம் போன்ற எல்லா உணர்வுகளின் கலவையாக உள்ளது இப்படம்.

Leave A Reply

Your email address will not be published.