‘பத்து தல’ தரபோகும் ஹாட்ரிக் வெற்றி! – உற்சாகத்தில் STR நடனம்!

கருநாட சக்ரவர்த்தி என கன்னட சினிமா ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஷிவ ராஜ்குமார், ரோரிங்க் ஸ்டார் ஶ்ரீமுரளி நடிப்பினில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், மஃப்டி. இப்படம் தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ‘ஆத்மன்’ சிலம்பரசன் டி. ஆர், கௌதம் கார்த்திக் இருவருடைய ஃபயர் காம்பினேஷனில் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது.

‘பத்து தல’ படத்தினை ’பென் ஸ்டுடியோ’ சார்பில் ஜெயந்தி லால் காடா, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.ஈ.ஞனவேல் ராஜா ஆகிய இருவரும்  இணைந்து தயாரித்துள்ளனர்.

‘பத்து தல’ படத்தை சூரியா, ஜோதிகா நடிப்பினில் வெளியான ‘சில்லுன்னு ஒரு காதல்’, படத்தினை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

‘ஆத்மன்’ சிலம்பரசன் எஸ்.டி.ஆர்,கௌதம் கார்த்திக் இவர்களுடன் பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே அருணாச்சலம், ஜோ மல்லூரி, கலையரசன், மனுஷ்ய புத்ரன்,சென்ராயன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

மாநாடு, வெந்து துணிந்தது காடு படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ‘ஆத்மன்’ சிலம்பரசன் எஸ்.டி.ஆர் நடிப்பினில் வெளிவரும் ‘பத்து தல’ படத்தினை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர் நோக்கியிருக்கிறார்கள்.

‘பத்து தல’ படத்தில் இடைவேளை விடும் நேரத்தில் தோன்றும் சிலம்பரசன்டி.ஆர் அதன் பிறகு தெறிக்கவிடும் காட்சிகளில் அதகளம் செய்வார். ‘மஃப்டி’ கன்னட படத்தில் அப்படித்தான் கதையமைப்பு இருக்கிறது.

‘பத்து தல’ படத்தில் 80 சதவிகிதம் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து இருக்கிறது. சிலம்பரசன் எஸ்.டி.ஆர், கௌதம் கார்த்திக் இருவரது திரையுலக பயணத்தில் இந்தப் படம் முக்கியதான படமாக இருக்கும் அதிலும் கௌதம் கார்த்திக்கிற்கு மிக மிக முக்கியமான படமாக இருக்கும்.

தமிழ் படத்திற்கு ஏற்றபடி சிற்சில மாற்றங்களை செய்தால் சிலம்பரசன் டி.ஆர் க்கு இந்த படமும் வெற்றி தான். ஆக, மாநாடு, வெந்து துணிந்தது காடு வெற்றி படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க இருக்கிறது. ‘பத்து தல’.

இதை உறுதி செய்வது போல பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிலம்பரசன் டி.ஆர் ன் பேச்சு அமைந்திருந்தது. இந்த விழாவின் முடிவில் அவரது நடனம், ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், இப்படத்தின் மீதான மிகப்பெரும் எதிர்பார்ப்பினையும் உருவாக்கியிருக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.