ஹன்சிகா நடிப்பினில் உருவாகும்  ஃபேண்டஸி, ஹாரர் காமெடி திரைப்படம்!

Masala Pix  நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர்  ஆர்.கண்ணண்  – Focus Films  நிறுவனத்துடன் இணைந்து இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தினை  தயாரித்து இயக்குகிறார்.

இந்தப்படம் குடும்பத்தில் உள்ள  அனைவரும் விரும்பி பார்க்கும்  உருவாகிறதாம். இதில் நாயகியாக  ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் R.கண்ணன் ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து  இப்படத்தை உருவாக்குவது குறிப்பிடதக்கது. இது தமிழ் சினிமாவுக்கு புதியதாகவும்,  ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாகவும் இப்படம் இருக்கும் என்கின்றனர்.

ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் நேத்ரா எனும்  இளம் அறிவியல் விஞ்ஞானியாக   நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னை ECR-ல்   ஒரு பிரமாண்டமான சயின்ஸ் லேப் ஒன்றை  பெரும் பொருட்செலவில் அமைக்கிறார்கள்.  படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பைனான்சியர் மகேந்திரா நிஹார் காமெராவை ஆன் செய்ய இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. 2022 ஆகஸ்ட் 15 ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்..

 

Leave A Reply

Your email address will not be published.