விரைவில் வெளிவரும் ‘கழுகு’ கிருஷ்ணாவின் “ராயர் பரம்பரை”.

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் , சின்னசாமி மெளனகுரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ராயர் பரம்பரை”.

‘கழுகு’ கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, அவருடன் மலையாளத்தில் ஹிட்டான ‘மரடோனா’, ‘டூ ஸ்டேட்ஸ்’ படங்களின் கதாநாயகி சரண்யா நாயரலிந்த படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

தெலுங்கு பட நாயகி மும்பை அனுசுலா மற்றும் மும்பை மாடல் கிருத்திகா என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன்  KR விஜயா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா RNR மனோகர், கஸ்தூரி, பவர் ஸ்டார், கலக்கப்போவது யாரு தங்கதுரை,  மிப்பு, கல்லூரி வினோத், சரண்யா, லொல்லு சபா சேஷு, ஷாலு ஷம்மு மற்றும் பலர் நடிக்க  செண்டிமென்ட் கலந்த மிகப்பெரிய காமெடி படமாக பொள்ளாச்சியில் தயாராகி உள்ளது.

கொரோனா  ஊரடங்கு காலத்திலும் சூட்டிங் ஒரே schedule-இல் பிளான் செய்யப்பட்டு டிசம்பர் தொடங்கி பொங்கலுக்கு முன் முடிக்கப்பட்டது.

மிரட்டலான சண்டைக் காட்சிகளுடனும், பல லட்சம் ரூபாயில் மிகப்பெரிய செட் அமைத்து சாண்டி மாஸ்டரின் வித்தியாசமான நடனத்துடனும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ராயர் பரம்பரை.

Comments are closed.