‘ஜெய் பீம்’ படம் ரசிகர்களை பார்க்கத் தூண்டுவது ஏன்?  

இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருப்பது, இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரம். அதனால் ரசிகர்களுக்கு பார்க்க வேண்டும் என தோன்றுகிறது. மேலும் ‘ஜெய் பீம்’ ட்ரெயலரில் உணர்ச்சிமிக்க ஆழமான  சூர்யாவின் நடிப்பும் இன்னொரு காரணம்.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். ஒரு நல்ல கதை பாதி வெற்றியைத் தரும். மீதிக்கு அதை கொண்டு சேர்க்க நல்ல நடிகர்கள் வேண்டும். அப்போது தான் உயிர் கிடைக்கும். அது இந்தபடத்தில் சாத்தியமாகியுள்ளதால் இதுவும் படத்தினை பார்க்கத் தூண்டும் ஒரு காரணமாகும்.

நீதிமன்றக் காட்சிகளைக் காண்பதில் எப்போதுமே ரசிகர்களுக்கு தனி ஆர்வம் இருக்கும். அதுவும் அழுத்தமான நீதிமன்றக் காட்சிகள் என்றால் கேட்கவா வேண்டும். ஜெய் பீமில் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையேயான வாதவிவாதங்கள் நீதிமன்ற அறைக் காட்சிகளாக ஆழமாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ட்ரெய்லரில் பார்த்தபோது ஏற்பட்ட தாக்கம் படம் முழுவதுமே நமக்கும் ஏற்படும். ரசிகர்களை நிச்சயமாக சீட்டின் நுணியில் அமரவைத்து பார்க்க வைக்கும். என தோன்றுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.