சமந்தாவின் “யசோதா” டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் கூட்டணி  இணைந்து இயக்கும் இப்படத்தினை Sridevi Movies சார்பில் மூத்த தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘யசோதா’ படத்தின் பரபரப்பான டீஸர் மிக சுவராஸ்யமாக அமைந்துள்ளது. குழப்பமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் சமந்தா சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், உயிர் பிழைக்க போராடுவதை டீசர் காட்டுகிறது. கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கும் அவர், பெண் மருத்துவர் பரிந்துரைத்தும் பார்க்ககூடாத ஒன்றை பார்த்து விடுகிறார். அவரை சுற்றி என்ன தான் நடக்கிறது? அவர் ஏன் வாழப் போராடுகிறார்? அவர் எதை வெளிப்படுத்த பாடுபடுகிறார்? அதுதான் படத்தின் சுவாரஸ்ய  மர்மம் என்கிறார் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.

தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்’யசோதா’  படம் பற்றி கூறுகையில்..,

“எங்கள் டீசருக்கு நாடு முழுவதும், அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் 1800+ திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் ‘டீசர்’ இது தான். திரையரங்குகளிலும் சமூக ஊடகங்களிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சமந்தாவின் நடிப்பு மற்றும் பிரமாண்ட உருவாக்கம் பற்றிய பாராட்டுக்களை கேட்பது மிகுந்த மகிழ்ச்சி.

சமந்தா மிகச்சிறப்பான அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் இப்படத்தை சமரசமற்ற ஆக்‌ஷன் த்ரில்லராக மாற்றியுள்ளார். இந்தக் கதையே மிகவும் தனித்துவமானது. நீங்கள் பார்க்கும் டீசர் படத்தின் ஒரு துளி மட்டுமே. இன்னும் பல ஆச்சர்யங்கள் படத்தில் காத்திருக்கிறது. எந்த சமரசமுமின்றி சிறந்த தொழில் நுட்ப தரத்தில் 100 நாட்களில் பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ளோம். டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன, VFX மற்றும் ரீரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தினை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்.”

இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.