சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் D.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் சண்டிமுனி. நட்ராஜ் கதா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் வாசுவிக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன், கோவை ஈஸ்வரி, விசித்திரன், காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயன், ஷபிபாபு, விஜய்பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி,மேட்டூர் சேகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்காக சென்னை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங்கும் சிலையும் அமைக்கப் பட்டது …முப்பது அடி உயர சிலை அமைக்கப் பட்டு அதன் முன் மனீஷா யாதவ் பக்தி ரசம் சொட்ட “பெரும் கோபக்காரா,, எங்க சண்டி வீரா…தொல்லை தீர்க்க வாடா,,ஆவி ஓட்ட வாடா” என்று பாட்டு பாடி ஆடிய இந்த பாடல் காட்சியில் 40 நடன கலைஞர்கள் 300 துணை நடிகர் நடிகைகள் பங்கேற்க .அசோக்ராஜா நடன அமைப்பில் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது. இந்த பாடல் காட்சியில் தீ மிதி காட்சிகளும் ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப் பட்டது.
சண்டிமுனி படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் மில்கா செல்வகுமார். படம் குறித்து அவர் கூறியதாவது,,
சண்டிமுனி ஒரு ஹாரர் படம்.. நட்ராஜ் – மணீஷா யாதவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் நட்ராஜுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுபடவும் இருவருக்கும் திருமணம் நடக்கவும் குல தெயவ வழி பாட்டு காட்சி தான் இது என்றார் இயக்குனர்.. இந்தப்படத்தில் யோகி பாபு காமெடியில் தூள் கிளப்பி இருக்கிறார். படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்தது, பழனி கொடைக்கானல் நெய்க்காரன்பட்டி பொள்ளாச்சி வால்பாறை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடை பெற்றுள்ளது .
Comments are closed.