உயிர்க்குடிக்கும் குடிநீர் வியாபாரம். எச்சரிக்கும் ‘சர்தார்’ திரைப்படம்!

இயற்கையாய் கிடைக்கும் தண்ணீர், பல உயிரினங்களுக்கு பொதுவானதாகவும், மூலாதாரமாகவும் விளங்குகிறது. நவ நாகரீக மனிதனின் பேராசையால், அது பாட்டிலில் அடைத்து விற்கப்படும் கேவலமான சூழல், உலகம் முழுவதும் நடந்து வருகிறது.

இப்படி உலகம் முழுவதும் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கப்படும் அதன் வியாபார மதிப்பு ஆண்டுக்கு சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் கோடி. இதன் மூலம் உலகளாவிய வியாபாரப்போட்டி பெரும் வணிக நிறுவனங்களுக்கு இடையே வலுத்துள்ளது.

சுத்தமான குடிநீர் என மக்கள் வாங்கிக்குடிக்கும் அந்த பாட்டில் தண்ணீரில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் நுண்துகள்கள் அதாவது ‘பாலி எத்திலின் தெரெப்தலேட்’  கலந்துள்ளது,  என்றும் அதன் மூலம் நுரையீரல், கிட்னி, லிவர் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தனியார் வசம்  உள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்  வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இருவேடங்களில் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சர்தார்’. எஸ். லக்ஷ்மன் குமார் தனது ‘ப்ரின்ஸ் பிக்சர்ஸ்’ மூலம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் இந்த தண்ணீர் வியாபாரம் குறித்து விரிவாக எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது. பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு விழிப்புணர்வு தான் இந்தப்படம்.

இயக்குனர் பி.எஸ். மித்ரன் தனது ஒவ்வொரு படத்திலும் மக்களுக்கு தேவையான விஷயத்தை பேசிவருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குடும்பத்தினருடன் சென்று அவசியம் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டிய படம் சர்தார்.

Leave A Reply

Your email address will not be published.