மனித உரிமை ஆணையத்தின் பாராட்டைப் பெற்ற ‘சூமோட்டோ’ திரைப்படம்!

லக் ஸ்டோன் புரொடக்ஷன்ஸ் சார்பில் A.J.முகமது மன்னார் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘ சூமோட்டோ ‘..

சூமோட்டோவின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று வெளியிட்டார். இப்படத்தை இராமசாமி.P. ராஜா கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார்.

கோவிட்-19 முதல் அலையில், அதிகாரத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்காக ‘மாநில மனித உரிமை ஆணையம்’ தானாக தலையிட்டு வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணிற்கு நீதி கிடைக்க வழி செய்வதே சூமோட்டோ திரைப்படத்தின் கதை.

இந்தியாவில் முதன்முதலில் எடுக்கப்பட்ட ‘மனித உரிமை ஆணையம்’ பற்றிய முழு நீளத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சூமோட்டோ, உலக மனித உரிமை ஆணையத்தின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. என்பது மேலும் சிறப்பானது.  கதாநாயகனாக “நிசப்தம்” படப் புகழ் அஜய் ஸ்ரீதரும் , கதாநாயகிகளாக பனிமலர் பன்னீர்செல்வமும், அம்சரேகாவும் நடித்துள்ளனர்.

வில்லனாக “கேப்டன்” விஜயகாந்த்தின் ஆஸ்தான வசனகர்த்தா மற்றும் இயக்குனர் லியாகத் அலிகான் நடித்துள்ளார்.

மேலும் நெல்லை ப.கோ.சிவகுமார், கால்டாக்ஸி படப் புகழ் நிமல், ஒயிலாட்டம் ஷர்மிளி, கந்தசாமி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சூமோட்டோ படத்தை இராமசாமி.P. ராஜா கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு இளையராஜா வேலுசாமி, இசை வாரென் சார்லி, படத்தொகுப்பு முத்து கோடீஸ்வரன், பாடல்கள் சொற்கோ, வே.மதன்குமார், மதுரா மற்றும் புகழேந்தி. விரைவில் இப்படம் திரக்கு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.