‘ சூப்பர் டூப்பர்’ படத்தை வாங்கி வெளியிடுவேன் : ‘ லிப்ரா’ ரவீந்திரன் பேச்சு!*

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் ஏகே , நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா , படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவாகரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் ,அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது ,
” இந்த விழாவிற்கு என்னை நாயகன் துருவா ,இயக்குநர் ஏ கே , இசையமைப்பாளர் திவாகர் வந்துஅழைத்தார்கள். நானும் குறும்பட உலகத்திலிருந்து பெரும் படத்துக்கு பல கனவோடுவந்தவன். அப்போது எனக்குப் பழைய நினைவுகள் வந்தன. நிகழ்ச்சிக்கு இங்கே வந்துள்ள இந்த டி.சிவா சார் அன்று என்னை ஊக்கப்படுத்தியவர். அவர் இங்கிருக்கிறார். எனக்குத் தொழில்நுட்ப ரீதியில் ஆலோசனைகள் வழங்கிய ஜே எஸ்கே சதீஷ் சார் இங்கே இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .

இந்தப் படக்குழுவினரைப் பார்க்கும்போது ஒரு நம்பிக்கை வருகிறது. டிரைலரைப் பார்க்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. படத்திலும் அதில் இருக்கும் என நம்புகிறேன். படத்தை எனக்குப் பிடித்து இருந்தால் நிச்சயமாக நான் வாங்கி வெளியிடுவேன்.

நான் பெரும்பாலும் புதுவித படக்குழுவுடன் தான் பணியாற்றுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே உள்ள சினிமா வெளியீடு மற்றும் வியாபார விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது .அது புரிவதற்கு ஏழு வருடங்களானது. நேற்று வெளியான ‘கூர்கா’ படத்தை நான் முதன்முதலில் வெளியிட்டுள்ளேன். பெரிய விலை கொடுத்துவிட்டதாகவும் பலரும் சொன்னார்கள் .கதையை மட்டும் பார்த்தேன் .படமும் வெற்றிகரமாக ஓடுகிறது.
ஒரு படத்தை உருவாக்க நினைக்கும் போது கிடைக்கும் தோல்வியில் இருந்து எழுந்து போராடி கிடைக்கும் வெற்றி அளவில் பெரியதாக இருக்கும் ” என்றார்.

Comments are closed.